இலங்கை மண்ணில் நடப்பட்ட முதலாவது ஈரப்பலா மரம் எங்கேயுள்ளது. என்று கேட்டால் பெரும்பாலும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நீங்கள் கீழே படத்தில் காணும் ஈரப்பலா மரம் தான் முதன் முதலில் இலங்கையில் நடப்பட்ட ஈரப்பலா மரமாகும்..
இலங்கையை குடியேற்ற நாடாக வைத்திருந்த ஒல்லாந்தர்களே இதனை இங்கு கொண்டு வந்து நாட்டினார்கள். காலி கோட்டையில் இருந்த ஆஸ்பத்திரிக்கும் நீதிமன்றத்திற்கும் இடைப்பட்ட பூமியில் இந்த ஈரப்பலா மரமானது நடப்பட்டது.
இப்போது அந்த பழைமையான ஆஸ்பத்திரியானது .வர்த்தக மையமாக மாற்றப் பட்டுள்ளது.
300 வருடங்களைத் தாண்டியுள்ள இந்த மரத்தின் வேர்களிலிருந்து அரும்பியுள்ள கிளை மரங்கள் தமது பரம்பரையின் கதையை சொல்வதற்காகவே எழுந்து நிற்கிறது.
Artocarpos Altilis என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் ஈரப்பலாவானது காலியில் மட்டுமல்லாது இலங்கை முழுவதும் பரவிக் கிடக்கிறது.
ருசியான கறியோடு மாத்திரம் நின்று விடாமல் ஈரப்பலாவினால் வித விதமான தின்பண்டங்களும் செய்யப் படுகிறது.
இந்த ஈரப்பலா மரத்தை இலங்கையில் நடப்பட்டதற்கான பல கட்டுக் கதைகளும், காரணங்களும் சொல்லப் பட்டாலும் அது எமது சௌபாக்கியத்திற்காக நடப்பட்ட மரமென்றே நாம் கருத வேண்டும்
✍️ கலைமணாளன் ஹிஷாம்